செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (21:03 IST)

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே: பிரதமர் மோடி வாழ்த்து

eknath shinde
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சற்றுமுன் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் பதவியேற்ற நிலையில் அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவாளர்களை வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தார் என்பது தெரிந்ததே
 
 இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே அவர்கள் சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்