1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (13:26 IST)

கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்! – அலறியடித்து ஓடிய மக்கள்!

earthquake
கர்நாடகாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் குடகு மாவட்டத்திலும் அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் பல பகுதிகள் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மக்கள் பலரும் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், பொருட்சேதம் சிறிய அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.