1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (16:19 IST)

ஆப்கானிஸ்தான் நில நடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 என அதிகரிப்பு!

earthquake
ஆப்கானிஸ்தான்  நாட்டில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை முதல் கட்டமாக 250 பேர் வரை நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மீட்பு படையினர் தற்போது மீட்பு பணிகளை படிப்படியாக செய்துவரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இதுவரை 920 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது 
 
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பாக்திகா என்ற பகுதியில் தான் உயிரிழப்பு அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது 
 
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் இருந்து உள்ளதால் இடிபாடுகளுக்கிடையே இன்னும் அதிக நபர்கள் இருக்கலாம் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன