புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (09:38 IST)

அத்தனைப் பாதுகாப்பையும் தாண்டி வந்த நாய் – எப்படி நடந்தது ?

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பாதுகாப்புகளைத் தாண்டி வந்த நாய் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியப் புகழ்பெற்ற சீன அதிபர் இந்திய பிரதமர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்திய பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் உடன் அர்ஜுன ரதம் பற்றி விளக்கிக் கொண்டிருக்கும்போது பாதுகாப்புகளைத் தாண்டி நாய் ஒன்று அவர்களுக்கு அருகில் வந்தது.

இருவரின் வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னரும் இது எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளதுள்ளது. தெருநாய்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் அதிகாரிகள் முன்னேற்பாடாக 400க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். அப்படியும் எப்படியோ இந்த ஒரு நாய் மட்டும் தப்பித்து வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.