திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (19:33 IST)

டெல்லி:காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிதி உதவி - முதல்வர் கெஜ்ரிவால்

Kejriwal
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்ட உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு  நிதி உதவி அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் இளம்பெண் ஒருவர் புத்தாண்டு கொண்டாடிய விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கார் ஒன்று மோதியதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியானார்.

டெல்லியில் நடந்த இந்த கோர சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேரை போலீஸார்  கைது செய்துள்ளதாகவும் 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டுமென என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்ட உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைக்கவும் வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.