டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வாகனத்தில் இன்னொரு பெண்ணா? பரபரப்பு தகவல்
டெல்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான இளம் பெண் வாகனத்தில் இன்னொரு பெண்ணா? பரபரப்பு தகவல்
டெல்லியில் இளம்பெண் ஒருவர் புத்தாண்டு கொண்டாடிய விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கார் ஒன்று மோதியதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியானதாக செய்திகள் வெளியானது.
டெல்லியில் நடந்த இந்த கோர சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் வாகனத்தின் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து சென்றது தற்போது சிசிடிவி காட்சிகளின் போது தெரியவந்துள்ளது.
ஆனால் ஒரு பெண் மட்டுமே பலியாகியுள்ள நிலையில் பின்னால் அமர்ந்து சென்ற இன்னொரு பெண் யார்? அவர் விபத்துக்கு முன்பே இறங்கி விட்டாரா? என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து மேலும் சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளன.ர் இந்த சிசிடிவி காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
Edited by Siva