வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:48 IST)

டெல்லி வன்முறை; 35 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அப்பகுதியில் அமைதி நிலவினாலும் மக்கள் பதற்றத்துடன் இருப்பதாக தெரியவருகிறது. மேலும் அப்பகுதியில் கலவரம் தொடராமல் இருக்க, துணை நிலை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.