புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (19:06 IST)

மேனகா காந்தியால் மாசு ஆகிவிட்டதா அம்பேத்கர் சிலை? உபியில் பரபரப்பு

மேனகா காந்தி மாலை போட்டு மரியாதை செய்த அம்பேத்கர் சிலை மாசு அடைந்துவிட்டதாக கூறி ஒரு பிரிவினர் பால் மற்றும் தண்ணீரால் சிலையை சுத்தம் செய்ததால் உபியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உபியில் உள்ள வதேரா நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மத்திய அமைச்சர் உள்பட ஒருசில பாஜக தலைவர்கள் வந்தனர்
 
அதே நேரத்தில் பரோடா பல்கலைக்கழகத்தில் மஹாராஜா சாயாஜிராவ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாகூர் சோலங்கி என்பவரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க தனது ஆதரவாளர்களுடன் வந்தார். ஆனால் மத்திய அமைச்சர் வந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்கக தாகூர் காவல்துறையினர்களால் தடுக்கப்பட்டார். மேனகா காந்தி மாலை அணிவித்து சென்றதும்தான் அவர் அனுமதிக்கப்பட்டார்
 
இந்த நிலையில் மேனகா காந்தி உள்பட பாஜக தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததால் அந்த சிலை மாசு அடைந்துவிட்டதாக கூறி தாகூர் ஆதரவாளர்கல் பால் மற்றும் தண்ணீரால் சிலையை சுத்தம் செய்து அதன்பின்னர் மாலை அணிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.