திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (08:58 IST)

ஊரடங்கு பலன் கொடுக்குமா? இன்றைய கேரள கொரோனா நிலவரம்!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆம், கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,541 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு இருந்து இதுவரை 37,73,754 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2,12,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு அறிவித்திருந்த கேரளாவில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள், கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.