கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு ஒரு டோஸ் போதும்: ஐ.சி.எம்.ஆர் தகவல்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி போதும் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும் இவை அனைத்தும் இரண்டு டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினாலே போதும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப் ட்டவர்கள் ஏற்கனவே சிகிச்சை பெறும்போது நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று இருப்பார்கள் என்றும் அதனால் அவர்களுக்கு மட்டும் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தினால் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது