1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (08:39 IST)

ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை கடந்து சென்றது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..!

ஒரிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் இந்த விபத்தில் 275 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
மேலும் இந்த விபத்தில் பலியான நூறுக்கும் மேற்பட்டார் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 51 மணி நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்து தற்போது விபத்து நடந்த இடத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று விபத்து நடந்த அதே இடத்தை கடந்து சென்றது. சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்த இடத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் சற்றுமுன் கடந்து சென்றது. 
 
வந்தே பாரத் ரயில் உள்பட சுமார் 70 ரயில்கள் மீண்டும் இந்த பாதையில் நேற்று முதல் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva