1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (18:12 IST)

ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர்...பரபரப்பு சம்பவம்

tirupathur
திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற  இளைஞரை பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஒடிஷா ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,  திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னலை உடைக்க முயன்ற  இளைஞரை பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் சிக்னலில்  திடீர் அதிர்வு ஏற்பட்டத்தை உணர்ந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மதுபோதையில் இருந்த இளைஞர் கோகுல் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.

எனவே, தமிழ் நாட்டில் நடக்கவிருந்த விபத்தை  போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.