திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (16:14 IST)

இடைத்தேர்தல் வெற்றி: ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்!

கர்நாடக தேர்தல் சிக்கலின் போது காங்கிரஸ் பீகார், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது போல தற்போது மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.
 
மேகாலயாவின் அம்பாதி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 21 ஆகி உள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது. 
 
மேகாலயா சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளார்கள். இதற்கு முன் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய மக்கள் கட்சிக்கு சரியாக 20 எம்எல்ஏ பலம் இருந்தது. 
 
இதனால் ஆளுநர் தேசிய மக்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். தற்போது மேகாலயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்பதால் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.