திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (21:13 IST)

துப்புரவுப் பணியாளர்கள் லிப்ட் பயன்படுத்த தடை

டெல்லியில் உள்ள பார் கவுன்சில் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் லிப்ட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
டெல்லியில் உள்ள இந்திய பார் கவுன்சில் வளாகத்தில் உள்ள லிப்ட்யை துப்புரவுப் பணியாளர்கள்  பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய பார் கவுன்சில் தலைவர் உத்தரவின் பேரில் உதவி செயலர் அசோக் குமார் பாண்டேவால் ஒட்டப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் வெளி நிறுவனங்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் லிப்ட் பயன்படுத்துவது கண்டுப்பிடிக்கப்பட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.
 
அதன்படி, உதவி செயலாளர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் லிப்ட் பயன்படுத்தினால் அவர்களது வருகைப் பதிவு ஒரு நாள் ரத்து செய்யப்படும்.
 
மேலும், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் தவிர பிற வெளி நபர்கள் லிப்ட் பயன்படுத்தினால் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.