1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:02 IST)

கொரோனா தடுப்பு பணிக்கு ராணுவம்?

ராணுவத்துக்கு சம்பந்தமான வாகனங்களை முழு அளவில் கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்துள்ளதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் வேகமாக மேற்கொண்டு வருகின்றன. 
 
நாடு முழுவதும் மருத்துவம், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மருந்து உற்பத்தியை அதிகரித்தல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர், டிஆர்டிஓ தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் இது குறித்து ஆலோசிக்கிறார்.