மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி: மத்திய அரசு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது மிக வேகமாக பரவி வருகிறது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, முழு ஊரடங்கும் இரவு நேர ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கருணா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது,
இந்த நிலையில் அதிகம் பேர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மருத்துவர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.