செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மே 2022 (08:35 IST)

கொளுத்தும் கோடை வெயில் - பள்ளி நேரங்களில் மாற்றம்?

நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

 
இது குறித்து மத்திய அரசு விரிவாக தெரிவித்துள்ளதாவது, 
1. கோடை வெயில் அதிகரித்து வருவதால் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி, மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம். 
2. விளையாட்டு போன்ற நிகழ்வுகளை காலை நேரத்திலேயே முடிக்கவும். 
3. பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள இடத்தில் நடத்த வேண்டும்.
4. பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது, அதில் முதலுதவி பெட்டி அவசியம் இருக்க வேண்டும். 
5. முடிந்தளவு குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம்.