திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 மே 2022 (09:14 IST)

இன்று எல்ஐசியின் பங்கு விற்பனை - தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்னென்ன?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று முதல் துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மக்களின் நம்பிக்கையை பெற்ற எல்ஐசி நிறுவனத்தின்  22 கோடி பங்குகள் விற்ப்னை இன்று முதல் துவங்குகிறது. பொதுமக்கள், எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. இதன் சில முக்கிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. விற்பனை வரும் ஒரு எல்ஐசி பங்கின் விலை ரூ.902 - ரூ. 949 வரை இருக்கும் 
 
2. 22 கோடி பங்குகளில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும், எல்ஐசி ஊழியர்களுக்கு 15.81 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
3. ஒரு ஒதுக்கீட்டில் 15 பங்குகள் இருக்கும் பட்சத்தில் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக 14 ஒதுக்கீடுகள் வரை விண்ணப்பிக்கலாம் 
 
4. ஒரு நபர் குறைந்தபட்சமாக ரூ.14,235 முதலீடு செய்ய வேண்டும். 
 
5. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 தள்ளுபடியும், ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் கிடைக்கும். 
 
6. சில்லறை முதலீட்டாளர்கள் மே 9 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
 
7. பங்கு விற்பனைக்குப் பிறகும் எல்ஐசி நிறுவனத்தின் 96.5% பங்குகள் மத்திய அரசிடமே இருக்கும். 
 
8. விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என  முடிவு செய்யப்படும். 
 
9. மே 17 ஆம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும்.