1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:09 IST)

ரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு அதிநவீனமான ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக Project 75 India என்ற திட்டம் மத்திய அரசால் வகுக்கப்பட்டது. 
 
இந்த கப்பல்களை தயாரிக்க ரூ.70,000 கோடி செலவு செய்ய முடிவுசெய்யப்பட்டது. திட்டத்திற்கான தொகையை அளிக்கும் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று பாதுகாப்புத்துறை வட்டாத்தில் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்கான ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நிதி வழங்கலுக்கான ஒப்புதல் காலாவதியாகிறது.
 
இதனால், மீண்டும் இத்தொகை ஒதுக்கீடுக்கு உரிய கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும், இந்த திட்டத்தில் ஒரு கப்பலை முழுதும் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர குறைந்தது 8 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.