வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 12 அக்டோபர் 2019 (19:05 IST)

மண்ணில் கேரம் போர்டு...’பிரபல தொழிலதிபர் ’பதிவிட்ட புகைப்படம் : சமூக வலைதளத்தில் வைரல் !

ஏழைச் சிறுவர்கள் மண்ணில் அமர்ந்து கொண்டு கேரம் போர்டு விளையாடுவது போன்ற போட்டோ ஒன்றை பிரபல தொழிலதிபர் ஆனந்த்  மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற தொழிலதிபர்  ஆனந்த் மகேந்திரா. இவர் இன்று தனது ஆனந்த் மகேந்திரா ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில், புழுதி மண்ணில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள்  மண் தளத்தில் ஒரு கேரம் போர்டு போன்று செய்து, குழி உருவாக்கி, அதனுள் பாட்டில் மூடிகளை வைத்து பெரிய பாட்டில் மூடிகளை ஸ்டிரைக்கராக உருவாக்கி கேரம் விளையாடிக் கொண்டுள்ளனர்.
 
இந்த புகைப்படத்தில் இந்தியாவில் வறுமை நிலை பற்றி எடுத்துக் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து, ஆனந்த் மகேந்திராவின் இந்த பதிவுக்கு லைக்குகள் போட்டு வருகின்றனர்.