புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:29 IST)

வீட்டுக்கு வந்த பாய் ஃப்ரெண்ட்: தந்தையை பாத்ரூமில் போட்டுதள்ளிய டீன் ஏஜ் மகள்!

தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை காதலனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பு படிக்கும் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூருரை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் ஜெயின் சமீபத்தில் பாத்ரூமில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்றிருந்ததால் விசாரணை அவரது மகளிடம் இருந்து துவங்கப்பட்டது. 
 
முதலில் முன்னும் பின்னுமாக பதில் அளித்த மகள், ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார். 10 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பி.காம் படிக்கும் மாணவனை காதலித்து வந்துள்ளார். 
அந்த பையன் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதாக இருந்துள்ளான். இதனை கண்டித்துள்ளார் ஜெயகுமார். அதோடு மகளின் போன பிடுங்கி வைத்துக்கொண்டார். இதனால் கடுப்பான மகள் தந்தையை கொல்ல முடிவெடுத்தார். 
 
தாயும் தமியும் வெளியூர் சென்றதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஜெயகுமார் மயங்கிய பின்னர் காதலனை அழைத்து பாத்ரூமில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். 
 
தந்தையை கொலை செய்த மகளையும், அவளுக்கு உதவியாக இருந்த காதலனையும் போலீஸார் கைது செய்து உள்ளனர்.