1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (11:49 IST)

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது: 87.33% மாணவ, மாணவிகள் தேர்ச்சி..!

சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சற்றுமுன் நாடு முழுவதும் வெளியான நிலையில் தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். 
 
சிபிஎஸ்சி பள்ளிகளில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இலட்சக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுதிய நிலையில் சிபிஎஸ் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. 
 
இந்த தேர்வு எழுதிய மாணவ மாணவர்களில் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சியை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி என்று சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 16,60,511 மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய நிலையில் இதில், 14,50,174 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 
 
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.40% மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran