ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 10 மே 2023 (14:59 IST)

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்

Vijay
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம்பெறும் மாணவர்களை  நடிகர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில்   நடித்து வருகிறார்.

பிரமாண்டமாக இப்படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் அடுத்த வெளியாகும் என்றுகூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் பரிசளித்து வரும் நிலையில், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பெறும் மாணவர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், 234 தொகுதிகளிலும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பென் பெறும் மாணவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் பரிசு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விரைவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இதற்கான விவரங்களைச் சேகரிக்க வேண்டுமென விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலார்  புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில், ''விஜய் மக்கள் இயக்க'' நிர்வாகிகளை சமீபத்தில் விஜய் சந்தித்த நிலையில், மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல்  என்பது அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.