வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 அக்டோபர் 2018 (12:49 IST)

சபரிமலை குறித்து அவதூறு கருத்து: பிரபல கேரள நடிகர் மீது வழக்குப்பதிவு

சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் என சர்ச்சைக் கருத்து கூறிய நடிகர் கொல்லம் கோபி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலினுள் உள்ளே செல்லலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்புகளையே தெரிவித்து வருகினறனர்.
 
இதுகுறித்து சமீபத்தில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் அவரின் இந்த சர்ச்சைக்கருத்து குறித்து புகார் அளிக்கப்பட்டதால், அவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகினறனர்.