1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 11 மே 2023 (00:53 IST)

ரத்தம் கொண்டு செல்லும் ட்ரோன்கள்: டெல்லியில் நடந்த பரிசோதனை வெற்றி..!

ட்ரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்த முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
அவசரமாக நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு துரிதமாக ரத்தத்தை ட்ரோன் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடத்தப்பட்டது. 
 
இந்த ட்ரோன் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தம் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பது குறித்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சியை கவுன்சில் ஈடுபட்டது. 
 
இந்த பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இனி அடுத்தடுத்து ட்ரோன்கள் மூலம் வெகு விரைவில் தேவையான நபருக்கு ரத்தம் மற்றும் மருந்துகள் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran