புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (20:31 IST)

பாஜகவின் ராஷியான தேர்தல் வியூக மன்னனுக்கு காங்கிரஸில் பதவி??

திமுக கட்சியின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும்  பிரசாந்த் கிஷோரை வரும் 2022 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு ஆலோசகராக நியமித்துள்ளார் பஞ்சாம் மாநில முதல்வர் அமிரீந்தர்சிங்.
 
இந்தியாவில் பிரபல தேர்தல் வியூகராக கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு இவரது வியூகம்ம் முக்கியப்பங்காற்றியது.
 
அதேபோல் பிகார் மாநிலத்தில் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாருக்கும் இவரது தேர்தல் வியூகமே ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
 
இதனால் இந்தச் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
இந்நிலையில் வரும் 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது எனவே, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில் அமரவேண்டி, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங், தேர்தல் வியூகம் வகுத்துத்தர பிரசாத் கிஷோரை இன்று நியமித்துள்ளார்.மேலும் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் கிஷோருக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.