2024 மக்களவை தோ்தல்: உ.பி.யில் 80 தொகுதிகளிலும் வெல்ல பாஜக இலக்கு
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள 80 தொகுதிகளிலும், பாஜக வெற்றி இலக்கு நிர்ணயித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒட்டுமொத்த 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் பூபிந்தர் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்
பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அணிவகுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே கடந்த தேர்தலில் பாஜக 64 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் இந்த முறை மொத்த தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran