திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 அக்டோபர் 2022 (16:49 IST)

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ஒரு வேட்பாளர் மனு நிராகரிப்பு, 2 போட்டியாளர்கள் உறுதி

congress
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது 
 
நேற்றுடன் மொத்தம் மூன்று வேட்புமனுக்கள் பதிவானது என்பதும், மல்லிகார்ஜூனே கார்கே, சசிதரூர் மற்றும் கே.என்.திரிபாதி ஆகிய 3 பேர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கே.என்.திரிபாதி வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில்  அக்டோபர் 8-ஆம் தேதிக்குள் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரில் ஒருவர் வாபஸ் பெறவில்லை எனில் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காந்தி குடும்பம் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by Mahendran