கரையைக் கடந்தது பிபர்ஜாய் புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் இல்லை..!
தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபர்ஜாய் புயல் தோன்றிய நிலையில் அந்த புயல் நேற்று இரவு கரையை கடந்தது.
குஜராத் அருகே பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தாழ்வான பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் நேற்று நள்ளிரவில் குஜராத் மாநிலம் ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் பெரும் சேதம் ஏற்படும் என முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் குஜராத் கடலோர மாவட்டங்களில் எந்த விதமான உயிர் சேதமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தற்போது மீட்பு பணியை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva