1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2022 (11:28 IST)

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: அதிரடி அறிவிப்பு

bank
வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வங்கி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது திடீரென நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
 
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ள இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கிப்பணிகள் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் பணியிடமாற்றம் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதனை பின்பற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது
 
இந்த போராட்டம் காரணமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வங்கிகள் இயங்காது என்றும் இதனால் முன்கூட்டியே வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணியை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva