திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (13:08 IST)

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு...

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாம். 
 
அதாவது, பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்றும், பொதுத் துறை வங்கிகளை இணைக்க கூடாது எனவும் முக்கிய கோரிக்கை வைக்கப்பட உள்ளதாம். அதோடு, வாராக்கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்கள் கட்ட வேண்டிய வாராக்கடன்களை தள்ளுபடி செய்ய கூடாது எனவும் கோரிக்கைகள் வைக்கப்படயுள்ளது. 
 
மே 30 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை, 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.