செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூன் 2018 (15:22 IST)

நீங்க ஏண்டா இங்க குளிச்சீங்க? தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கொடுமை

மகாராஸ்டிராவில் கிணற்றில் குளித்த 2 தலித் சிறுவர்களின் ஆடைகளை அவிழ்த்து கொடுமைபடுத்திய 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோவோம் மாவட்டத்தின் வகாதி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் 3 நாட்களுக்கு முன்னர் 2 தலித் இளைஞர்கள் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அவர்களை வழிமறித்த 2 இளைஞர்கள் ஏன் அந்த கிணற்றில் குளித்தீர்கள் என்க் கூறி அவர்களது ஆடையை அவிழ்த்து சரமாரியாக தாக்கினர். இதனை அந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோ எடுக்கும்போது சிறுவர்கள் உடலை இலைகளால் மறைத்துக் கதறும் காட்சி பார்பவர்களது கண்களை கலங்க வைக்கிறது.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சிறுவர்களைத் தாக்கிய ஈஸ்வா் ஜோஷி, பிரஹ்லாத் லோகா் ஆகிய இரு இளைஞர்கள் மீது  தாக்குதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.