ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (10:07 IST)

சொத்துக்காக 75 வயது மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்

ஒடிசாவில் சொத்துக்காக 75 வயதான மாமியாரை, அடித்து துன்புறுத்திய மருமகளை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா தாள்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து, தன் மகன் மருமகளோடு வசித்து வந்தார்.
 
இந்நிலையில் மூதாட்டியின் மகன் வேலைக்கு சென்ற நேரத்தில், அவரது மருமகள், மாமியாரிடம் சொத்து பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மருமகள், மாமியாரை அடித்து சித்ரவதை செய்ததோடு அவரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தாக்கியுள்ளார். இந்த கொடூர காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
 
இந்த வீடியோ வைரலாகவே போலீசார், மாமியாரை சித்ரவதை செய்த மருமகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.