அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மீண்டும் நீட்டிப்பு.! ஆக.27 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!!
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.