கைவசம் ஒரு தடுப்பூசி கூட இல்ல; தாமதித்தால் உயிர்பலி! – அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் தடுப்பூசி இல்லை என முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரொனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாநிலங்களுகு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கைவசம் இல்லை. அனைத்து தடுப்பூசி மையங்களும் பூட்டப்பட்டு வருகின்றன. மாநிலங்களுக்கு தடுப்பூசி அளிப்பத்து மத்திய அரசின் பொறுப்பு. இனியும் தாமதித்தால் உயிர்களை இழக்க வேண்டி வரும்” என வேதனை தெரிவித்துள்ளார்.