இந்தியாவில் உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் அதிக அளவில் இதுவரை சீனாவில் தயாராகி வந்தது
இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக உற்பத்தியை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
குறிப்பாக இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது
90 சதவீத ஆப்பிள் ஐபோன் உற்பத்தி தடைபட்டுள்ளதை அடுத்து அதனை ஈடுகட்டும் விதமாக இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது