1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (09:09 IST)

உலகக் கோப்பை வில்வித்தையில் தங்கம்! – புஷ்பா ஸ்டைல் காட்டிய இந்திய வீரர்கள்!

Archery
தென் கொரியாவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.

உலக கோப்பை வில்வித்தை போட்டிகளுக்கான இரண்டாவது நிலை ஆட்டம் தென் கொரியாவில் உள்ள குவாங்ஜூ பகுதியில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான காம்பவுண்ட் அணி இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவுகான் ஆகியோர் அடங்கிய மூவர் அணி பிரான்சை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் 232-230 என்ற பாயிண்ட் கணக்கில் பிரான்சை வீழ்த்திய இந்திய அணி தங்க பதக்கத்தை வென்றது. மேலும் கலப்பு அணிகள் பிரிவில் துருக்கியை வீழ்த்தி இந்தியாவின் அபிஷேக் வர்மா, அவ்னீத் கவுர் ஜோடி வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது.