1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (17:18 IST)

ராதிகா மெர்ச்சன்டை திருமணம் செய்யவுள்ள ஆனந்த் அம்பானி

Anand ambani- radhika
இந்தியாவில் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்டை மணக்கவுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர்  முகேஷ் அம்பானி. இவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, இரண்டாவது  மகள் ஆகியோருக்கு சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

இந்த  நிலையில், முகேஷ் அம்பானி- நிதா அம்பானி  ஆகியோரின் இளைய மகன் ஆனந்திற்கும்,  வைலா- நீரேன் மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ரதிகா மெர்ச்சன்டுக்கும் இன்று ராஜஸ்தான் மா  நிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீ நாத் ஜி கோவியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதில், இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி திருமணம் செய்யப்போகும் ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரும், ஹெல்த்கேர் நிறுவனத்தில் தற்போது இயக்குனராகப் பணியாற்றி வருவது  
குறிப்பிடத்தக்கது.