வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (11:22 IST)

அம்பேத்கர் சிலை மீண்டும் உடைப்பு: உபியில் பரபரப்பு

உத்தரபிரேதச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட சிலைகள் மர்ம நபர்களால் சேதபடுத்தப்பட்டது. குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் உபியில் பல தலைவர்களின் சிலைகள் அதிகமாக உடைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் உத்தரபிரேதச மாநிலத்தில் அம்பேதகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. உபி மாநிலத்தில் உள்ள திரிவேணிபுரம் ஜுன்சி என்ற பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையின் தலைப்பகுதியை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
 
ஏற்கனவே கடந்த மார்ச் 10-ம் தேதி உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள அஸம்கார் பகுதியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.