திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 டிசம்பர் 2019 (14:17 IST)

அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனை உறுதி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை கைதியான அக்‌ஷய் குமார் சிங்கின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் சிங், மகேஷ் சிங், அக்‌ஷய் குமார் சிங், பவன்குபதா, வினய் ஷர்மா ஆகியோருடன் 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான்

இதில் சிறுவனுக்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங் தரப்பில் தூக்கு தண்டனை குறித்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்‌ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூல அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது.