1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2024 (16:32 IST)

அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கியவருக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி!

Akash Vijayvarkiya
மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக பிரமுகருக்கு இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.



மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆகாஷ் விஜய்வர்கியா. இவர் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார். கடந்த 2019ம் ஆண்டு ஒரு பிரச்சினையில் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கியதற்காக அப்போது ஆகாஷ் விஜய்வர்கியா போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்படியான ஆகாஷ் விஜய்வர்கியாவுக்கு தற்போது இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆகாஷ் விஜய்வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவராவது இது முதல்முறை அல்ல. கடந்த 2010 முதல் 2020 வரையிலுமே ஆகாஷ் விஜய்வர்கியாதான் அதன் தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K