கொரோனாவை விட சாலை விபத்துகளே ஆபத்தானது: நிதின் கட்கரி
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிஅவர்கள் இன்று சென்னை வந்திருக்கும் நிலையில் அவர் சென்னையில் நடந்து வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது கொரோனாவை விட சாலை விபத்துகளே ஆபத்தானதாக உள்ளது என்றும் இந்தியாவில் மட்டும்தான் ஓட்டுனர் உரிமை மிக சுலபமாக பெற முடியும் என்றும் அது நல்லது இல்லை என்றும் தெரிவித்தார்
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்பதும் மத்திய மாநில அரசுகளின் சாலை பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதின் கட்காரி பெட்ரோல் டீசல் விலை உயர்வாக இருந்தால் மாற்று எரிபொருளுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது