புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:41 IST)

கார் திருடனை பிடிக்க முயற்சித்தவர் பரிதாப பலி

டெல்லியில் கார் திருடும் கும்பலை பிடிக்க முயற்சித்த போது, வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் விஷால். இவர் தனது தந்தையுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது காரில் வந்த இரண்டு திருடர்கள், வாகன நிறுத்தத்தில் இருந்த மற்றொரு காரை திருட முயற்சி செய்துள்ளனர். இதனைக்கண்ட விஷால், தன் தந்தையுடன் திருடர்களை பிடிப்பதற்கு அந்த காரின் சாவியை எடுக்க முயற்சித்துள்ளார்.
 
ஆனால் சுதாரித்து கொண்ட திருடர்கள் காரை வேகமாக ஓட்டியதால் விஷால் மற்றும் அவரது தந்தை காருடன் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் விஷால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷாலின் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் போலீஸார் மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். திருடனை பிடிக்க சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.