வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (20:28 IST)

அமித்ஷா பேரணியில் பயங்கர மோதல்: கொல்கத்தாவில் போலீசார் தடியடி

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். அடுத்த பிரதமராகவும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருப்பதால் அவரை சமாளிப்பது பாஜகவுக்கு ஒரு பெரும் வேலையாக உள்ளது.
 
எனவே மேற்குவங்கத்தில் பாஜக அதிக தொகுதிகளை வென்று மம்தா பானர்ஜியின் பிரதமர் கனவை கலைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் அம்மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் மாபெரும் பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த பேரணியின் போது, திரிணாமூல் காங்கிரஸ்-பாஜகவினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இந்த  மோதலில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் 2 கட்சிகளை சேர்ந்த தொண்டர்களின் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெரும் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது