1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 மே 2019 (16:51 IST)

'டிக் டாக் 'வீடியோவால் 3 பேர் உயிரிழப்பு : பதறவைக்கும் சம்பவம்

இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விபரீத ஆசைகளும் மனிதனுக்குக் கொடிகட்டிப் பறக்கிறது. அதற்கேற்ப செல்பொன்களும் சந்தையில் புதுவிதவிதமான வசதிகளுடன் கிடைக்கிறது. அதனால்  பரவிவரும் செல்ஃபி மோகம் யாரைத்தான் விட்டுவைத்தது.
செல்ஃபியால் பல விபரீதங்கள் ஏற்படுவதை நாள்தோறும் தொலைக்காட்சி, டிவிக்களில் பார்க்கிறோம். அதேபோல் ஒரு அசம்பாவிதம் ஹரியானாவில் நடந்துள்ளது.
 
கடந்த திங்கள் கிழமை அன்று அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த 4 பேர் டிக்டாக் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இது சரியாக அரைமணி நேரத்துக்கு மேல் நடந்ததாகத் தெரிகிறது.
 
அப்போது துரதிஷ்டவசமாக ரயில் வேகத்துடன் வந்துள்ளது. இதைப் பார்த்த தினேஷ் என்பவர் சுதாரித்துக்கொண்டு கீழே குதித்துவிட்டார். அனால் மற்ற மூவர் மீது ரயில் மின்னல் வேகத்தில் மோதியது.
 
சுமார் 30 அடிதூரத்துக்கு அம்மூவரின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் மூவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்ய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.