ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (13:48 IST)

மகனை இழந்த தந்தையிடம் கைவரிசை; 7 லட்சத்தை அபேஸ் செய்த மந்திரவாதி

ஆந்திராவில் இறந்துபோன மகனை மீண்டும் உயிரோடு வரவழைப்பதாக கூறி மந்திரவாதி ஒரு தந்தையை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமு(56). இவரது மகனான சீனிவாசலு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் வீடு திரும்பிய சீனிவாசலு பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். மகன் மீது தீராத பாசம் வைத்திருந்த ராமு, அவரது பிரிவை தாங்க முடியாமல் தவித்து வந்தார். அப்போது ராமுவிடம் வந்த மந்திரவாதி ஒருவன், உங்களது மகனை உயிரோடு மீட்டுத்தருகிறேன் அதற்கு 7 லட்சம் செலவாகும் என கூறியுள்ளான்.
 
இடனை நம்பிய ராமு, அந்த மந்திரவாதியிடம் 7 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். மந்திரவாதி ராமுவிடம் உங்களது மகன் கல்லறைக்கு சென்று தொடர்ச்சியாக 41 நாட்கள் பூஜை செய்யுங்கள் உங்கள் மகன் மீண்டு வருவான் என கூறியுள்ளான். அதன்படி ராமுவும் இறந்துபோன மகனின் கல்லறை முன்பு பூஜை செய்து வந்தார். அப்படி 38 நாட்கள் ஓடிவிட்டது. இன்னும் 3 நாட்களில் மகன் திரும்பிவருவான் என காத்துக்கொண்டிருந்தார் ராமு. 
 
ஆனால் அங்கு போலீஸ் தான் வந்தது. போலீஸார் ராமுவிடம் நீங்கள் நினைப்பது போல உங்கள் மகன் திரும்ப வரமாட்டார் என கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.