வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:58 IST)

குடிமகன்களுக்கு செய்தி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாளை (ஜனவரி 30) தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூடுமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


 
மகாத்மா காந்தி ஜனவரி 30ம் தேதி மரணம் அடைந்தார். அவரது அனைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவிடக் கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்துறை செயலரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்துக் கொண்ட நீதிமன்றம், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஏற்கனவே ஜனவரி 15, ஜனவரி 21 மற்றும் ஜனவரி 26 
ஆகிய நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.