1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (10:39 IST)

ஆண்ட்டியுடன் தகாத உறவு: காட்டுப்பகுதியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

ஆந்திராவில் திருமணம் ஆன பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் டிக்குவாபுடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜலு. இவருக்கு 19 வயதில் ஒரு மகன் இருந்தார். இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த வாலிபருக்கு அதே கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் வேலைக்கு சென்ற இளைஞர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால், கோவிந்தராஜலு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தேடுதல் வேட்டையை துவங்கிய போலீஸார், இளைஞரின் உடல் பாகங்களை ஒரு காட்டுப்பகுதியில் மீட்டனர்.
 
இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.