டெல்லியில் உண்ணாவிரதம்: முதல்வர் எடுத்த அதிரடி முடிவால் பெரும் பரபரப்பு

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:45 IST)
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று ஆந்திர மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் மத்திய அரசில் இருந்து சந்திராபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி சமீபத்தில் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி இன்று ஒருநாள் டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருக்கவுள்ளார். அவருடன் மாநில அமைச்சர்களும், தெலுங்கு தேச எம்பிக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த உண்ணாவிரதம் 'தர்ம போராட்ட தீக்சா' என்ற பெயரில் நடைபெறவுள்ளது.


முன்னதாக உண்ணவிரதம் தொடங்குவதற்கு முன் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :