1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:32 IST)

ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண்

ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இல்லாத பெண்ணுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால் அந்தப் பெண் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் ஷாகஞ்ச் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அவரின் பெயரில் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கில் இல்லாத காரணத்தால் மருத்துவமனை ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் மனைவியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டார். ஆனால் அந்த பெண் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். தாயும் சேயும் தற்பொழுது நலமாக உள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.